Header Ads

startMiner - free and simple next generation Bitcoin mining software

ஒரே பக்கத்திலேயே YouTube வீடியோக்களை, தேடிக் கொண்டே காண்பது எப்படி???

நீங்கள் YouTube- வீடியோக்களை கணினி திரையில் படம் பார்க்கும் போது திடீரென புதிய படம் பற்றி தேட வேண்டி நினைப்பீர்கள். ஆனால் அதற்கு இன்னொரு டேப் அல்லது புதிய உலவி திரையில் மீண்டும் YouTube தளத்தை திறந்து தேட வேண்டும்.  இதனால் நீங்கள் தற்போது பார்க்கும் படத்தை பார்க்க தடங்கல் ஏற்படும் அல்லவா? இதே நீங்கள் மொபைலில்  அன்றாய்டு-குரோம்) பார்த்தீர்கள் என்றால், சேர்ச் பக்கத்தில் நீங்கள் இருந்தாலும் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் படம் சின்னதாக கீழே ஒரு மூலையில் தெரியும். இந்த வசதி தற்போது  டெஸ்க் டாப் கணினிகளில் YouTube  பார்ப்பவர்களுக்கும்  வந்துள்ளது. ஆனால் இது கூகுள் குரோம் உலவி வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும். இதற்கு  நீங்கள்  குரோமின் சொருகு நிரலை (Extension)  நிறுவ வேண்டும்.

இதனை உடனே இன்ஸ்டால் செய்ய முதலில் இந்த பக்கத்தை திறக்கவும்.(https://chrome.google.com/webstore/detail/youtube-picture-in-pictur/dfanpgpmfdocbeldhfgeafndhoiifgpe )

அதன் பின்  மேலே குறியிட்டு காட்டப்பட்டுள்ள Added  Chrome-ஐ கிளிக் செய்து அதன்  வழியே உங்களது மின்னஞ்சல் தகவல்களை செலுத்தி  உங்கள் சாதனத்தில் க்ரோமை நிறுவவும். அதன் பின் YouTube ஒரு வீடியோவை  பார்த்துக் கொண்டிருக்கும்போது மற்றொரு வீடியோவை  ரைட் கிளிக் செய்து  அதில் Play Picture in  Picture-ஐ தேர்ந்தெடுத்து அதன் வழியே  ஒரே பக்கத்தில்  ஒரு வீடியோவை தேடிக்  கொண்டே மற்றொரு வீடியோவைக்  கண்டு ரசிக்கலாம்.



கருத்துகள் இல்லை:

MAM.Thanis Shihab. Blogger இயக்குவது.