விண்வெளி யுகத்தினுள் நுழைந்த இலங்கை
செய்மதி தொழில்நுட்ப யுகத்தினுள் இலங்கை நுழையவிருக்கிறது. ஆம்! எதிர்வரும் 2020ஆம் ஆண்டு இலங்கை சார்பில் நெனோ தொழில்நுட்பத்திலான செய்மதி ஒன்று விண்ணுக்குச் செலுத்தப்படவிருக்கிறது.
இதற்காக, இலங்கையின் செய்மதித் தொழில்நுட்பத் துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் ரஷ்ய விண்வெளி நிறுவனம் ஒன்றுடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை சார்பில் ஆர்தர் சி.கிளார்க் நிறுவகமே இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இவ்வொப்பந்தத்தின்படி, நெனோ தொழில்நுட்பத்தை இலங்கைக்குத் தர ரஷ்யாவின் சமாரா விண்வெளிப் பல்கலைக்கழகம் இணங்கியுள்ளதுடன், விண்வெளியில் செய்மதிகளை நிலைநிறுத்துவதற்கான நிலையங்களை அமைக்கவும் உதவவுள்ளது.
கருத்துகள் இல்லை: