Header Ads

startMiner - free and simple next generation Bitcoin mining software

20ஆம் திகதி இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யாளராக சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க நியமனம்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யாளராக சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க இம்­மாதம் 20ஆம் திகதி பொறுப்பேற்பார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
 

இலங்­கையின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ரா­க­வி­ருந்த கிரஹம் போர்ட், சம்­பியன்ஸ் கிண்ணத் தொட­ருடன் இரா­ஜி­னாமா செய்­த­தை­ய­டுத்து நிரந்­தர தலைமைப் பயிற்­சி­யாளர் இல்­லாமல் இலங்கை அணி தொடர்­களில் பங்­கேற்று வரு­கி­றது.
இந்­நி­லையில் பங்­க­ளாதேஷ் அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ரான சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவை இலங்கை அணு­கி­யது. தற்­போது ஹத்­து­ரு­சிங்­கவும் இணக்கம் தெரி­வித்­துள்ள நிலையில் இம்­மாதம் 20ஆம் திகதி பொறுப்பேற்பார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

MAM.Thanis Shihab. Blogger இயக்குவது.