Header Ads

startMiner - free and simple next generation Bitcoin mining software

இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த இங்கிலாந்து.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அணிகள் தரவரிசையில், இந்தியாவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதலிடம் பிடித்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முடிவுகளின் தொகுப்பு அடிப்படையில் அணிகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
https://shihabmalar.blogspot.com/
அதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் அணி 125 புள்ளிகள் பெற்று, இந்திய அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த 2014-15ஆம் ஆண்டுகளில், 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
அதன் பிறகு, 2015-16 மற்றும் 2016-17ஆம் ஆண்டுகளில் சிறப்பாக விளையாடியதால், 50 சதவித அளவு முன்னேற்றத்துடன் 8 புள்ளிகளையும் அதிகமாக பெற்றது. இதன்மூலம், மொத்தம் 125 புள்ளிகளை பெற்று இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. 122 புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் தென் ஆப்பிரிக்கா(113), நியூசிலாந்து(112) அணிகள் முறையே ஒரு புள்ளியை இழந்ததால், 3வது மற்றும் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. மற்ற அணிகளின் புள்ளிகளில் மாற்றம் இல்லாததால், தமது முந்தைய நிலையிலேயே அவை நீடிக்கின்றன. நடப்பு உலக சாம்பியனான அவுஸ்திரேலியா அணி(104) 5வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

MAM.Thanis Shihab. Blogger இயக்குவது.