Header Ads

startMiner - free and simple next generation Bitcoin mining software

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை புரோபஷனல் கேமராவாக மாற்றும் செயலிகள் -05.

ஸ்மார்ட்போன்களில் மற்ற அம்சங்களை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக அதன் கேமரா விளங்குகிறது. இன்றைய ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கேமரா மிகவும் பிரபலமானதாக பார்க்கப்படும் நிலையில், புகைப்பட பிரியர்களுக்கான தொகுப்பாக இது அமைந்துள்ளது.
கூகுள் கேமரா (Google Camera) 
பல்வேறு புதிய அம்சங்கள் நிறைந்த கூகுள் கேமரா மூலம் தலைச்சிறந்த புகைப்படங்களை மிகவேகமாக எடுக்க முடியும். மிக எளிய வடிவமைப்பு மற்றும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள கூகுள் கேமரா மூலம் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுக்க அதிக சிரமம் கொள்ளத் தேவையில்லை.
கேண்டி கேமரா (Candy Camera) 
செல்பிக்களை எடுக்க மிகச்சிறந்த செயலியாக இது இருக்கிறது. ஜெபி பிரதர்ஸ் எனும் பிரபல நிறுவனம் உருவாக்கிய கேண்டி கேமரா அதிக புகைப்படங்களை எடுத்து அதனை அழகாக ஒற்றை பிரேமில் கொலாஜ் செய்ய பல்வேறு ஆப்ஷன்களை வழங்குகிரறது. இத்துடன் இதில் உள்ள பல்வேறு ஃபில்ட்டர்கள் புகைப்படங்களில் உங்களது அழகை கூட்டும்.
ரெட்ரிக்கா (Retrica) 
பேஸ்புக்கில் அதிக பழைய காலத்து மற்றும் அதிக துல்லியமான புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முக்கிய காரணமாக ரெட்ரிக்கா செயலி இருக்கிறது. ஐபோன் தரத்திலான புகைப்படங்களை எடுக்க வழி செய்யும் ரெட்ரிக்கா கொண்டு மற்ற செயலிகள் வழங்காத அம்சங்களை பயன்படுத்த முடியும்.
ஆஃப்டர்ஃபோகஸ் (AfterFocus) 
இந்த செயலியை கொண்டு டிஎஸ்எல்ஆர் ரக பேக்கிரவுண்டுகளை உருவாக்க முடியும். இத்துடன் இதில் கிடைக்கும் அதிகப்படியான ஃபில்ட்டர்கள் புகைப்படங்களை அழகாக்குகின்றன. அதிக இயற்கையான மற்றும் அழகிய புகைப்படங்களை எடுக்க ஆஃப்டர்ஃபோகஸ் செயலி சிறப்பானதாக இருக்கிறது.
ஃபோட்டோ லேப் பிக்சர் எடிட்டர் எஃப்எக்ஸ் (Photo Lab Picture Editor FX)
 அதிக ஸ்டைலான மற்றும் குறும்புத்தனமான எஃபெக்ட்களை இந்த செயலி வழங்குகிறது. ஃபேஸ் மான்டேஜ், போட்டோ ஃபிர்ம், அனிமேட்டெட் எஃபெக்ட் மற்றும் போட்டோ ஃபில்ட்டர்களை கொண்டிருக்கிறது. அதிக துல்லியமான மற்றும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க இந்த செயலி வழி செய்கிறது.

கருத்துகள் இல்லை:

MAM.Thanis Shihab. Blogger இயக்குவது.