Header Ads

startMiner - free and simple next generation Bitcoin mining software

மொபைல் பேட்டரி நீடிக்க: செய்ய வேண்டியை, செய்ய கூடாதவை...

அனைத்து வித மின்சாதனங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்தது  அதன் பேட்டரி. பேட்டரி வாழ்நாளை நீட்டிக்கவோ அல்லது அதன் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகரிக்கவும் சில டிப்ஸ்..
http://shihabmalar.blogspot.com/
 
சிலர் பேட்டரி முழுமையாக தீர்ந்த பின் அவற்றை மீண்டும் சார்ஜ் செய்வர். ஆனால் பேட்டரி முழுமையாக தீர்ந்த பின் தான் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும் என எவ்வித கட்டாயமும் இல்லை. 
 
பேட்டரி அளவு 10 - 20% வரை இருக்கும் போது அவற்றை மீண்டும் சார்ஜ் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது முழுமையாக சார்ஜ் ஆகும் பேட்டரி திறன் அளவு 1000 முதல் 1100 வரை அதிகரிக்கும். 
 
மொபைல் முழுமையாக சார்ஜ் ஆன பின்னரும் சார்ஜரிலேயே போடப்பட்டிருந்தால் எவ்வித பாதிப்பையும் பேட்டரியில் ஏற்படுத்தாது.
 
ஸ்மார்ட்போன் பேட்டரியை சத்தமில்லாமல் கரைப்பது ஜிபிஎஸ் தான். ஸ்மார்ட்போன் எந்த பிரான்டு என்றாலும் அதில் இருக்கும் ஜிபிஎஸ் (GPS) அல்லது லொகேஷன் (Location) போன்ற ஆப்ஷன்களை ஆஃப் செய்து வைக்க வேண்டும். 
 
மொபைல் டேட்டா விலை குறைவாகியுள்ளதால் எந்நேரமும் அவற்றையே பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு செய்யும் போது பேட்டரி பேக்கப் சீக்கிரம் தீர்ந்துவிடும். 
 
ஸ்கிரீன் பிரைட்னசை ஆட்டோவில் செட் செய்தால் ஸ்மார்ட்போனின் பேட்டரி பேக்கப் சற்றே கூடுதலாக கிடைக்கும். 
 
போனின் பேட்டரி சேவர் மோட் பயன்படுத்தலாம். இந்த ஆப்ஷனால் போனின் செயல்பாடு குறைக்கப்படும், இதனால் பேட்டரி பேக்கப் நேரம் அதிகமாக கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

MAM.Thanis Shihab. Blogger இயக்குவது.