Header Ads

startMiner - free and simple next generation Bitcoin mining software

பாகிஸ்தானிடம் சரணடைந்தது தென்னாபிரிக்கா.

பலம்­பொ­ருந்­திய தென்­னா­பி­ரிக்க அணிக்கு எதி­ரான போட்­டியில் பாகிஸ்தான் அணி டக்வேர்த் லுயிஸ் முறையில் 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நேற்று பர்­மிங்­ஹாமில் நடை­பெற்ற 7ஆவது லீக் ஆட்­டத்தில் ‘பி’ பிரிவில் இடம்­பெற்­றுள்ள பாகிஸ்தான் – தென்­னா­பி­ரிக்க அணிகள் மோதின.
இப்­போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற தென்­னா­பி­ரிக்க அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாட முடி­வு­செய்­தது. 


அதன்­படி தென்­னா­பி­ரிக்க அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி கொக் (33), ஹசிம் அம்லா (16), டூ பிௌஸிஸ் (26),  டி வில்­லியர்ஸ் (0), என அடுத்­த­டுத்து ஆட்­ட­மி­ழந்­தனர். இதனால் தென்­னா­பி­ரிக்க அணி தடு­மா­றி­யது. மில்லர் மட்டும் ஒரு­மு­னையில் நிலைத்து நின்று ஆடிய போதிலும் மறு­மு­னையில் சீரான இடை­வெ­ளியில் விக்­கெட்­டுக்கள் வீழ்ந்­தன.
தென்­னா­பி­ரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 219 ஓட்­டங்­க­ளை சேர்த்­தது. இந்நிலையில் பலம்­பொ­ருந்­திய தென்­னா­பி­ரிக்க அணியை 219 ஓட்­டங்­க­ளுக்குள்  பாகிஸ்தான் அணி சரணடையச் செய்தது.
 
தென்­னா­பி­ரிக்க அணியில் அதி­க­பட்­ச­மாக ஆட்­ட­மி­ழக்­காமல் மில்லர் 75 ஓட்­டங்­களை எடுத்தார். 
பாகிஸ்தான் தரப்பில் அதி­க­பட்­ச­மாக ஹசன் அலி 3 விக்­கெட்­டுக்­களையும் ஜூனைத், வசிம் தலா 2 விக்­கெட்­டு­க்க­ளையும் கைப்­பற்­றினர்.220 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 27 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 119 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது போட்டியின் இடை நடுவில் வழமைபோன்று மழை குறுக்கிட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி இடை நடுவே தடைப்பட்டது. இதையடுத்து டக்வேர்த் லுயிஸ் முறையில்  27 ஓவர்களில் 101 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி பெற்றிருந்தால் வெற்றி என போட்டி மத்தியஸ்தர்களால் அறிவிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி, 27 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து  119 ஓட்டங்களைப்பெற்றிருந்ததால் 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

MAM.Thanis Shihab. Blogger இயக்குவது.