Header Ads

startMiner - free and simple next generation Bitcoin mining software

மகளிர் உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம் : 8 நாடுகள் களத்தில்.

 http://shihabmalar.blogspot.com/

11ஆவது மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்­கி­லாந்தில் இன்று ஆரம்­ப­மா­கின்­றது. தொடக்க நாளான இன்று இரண்டு போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. 
இதில் இலங்கை, நடப்பு சம்­பியன் அவுஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து, நியூ­ஸி­லாந்து, பாகிஸ்தான், தென்­னா­பி­ரிக்கா, இந்­தியா, மேற்­கிந்­தியத் தீவுகள் ஆகிய நாடுகள் பங்­கேற்­கின்­றன. ஒவ்­வொரு அணியும் மற்ற அணி­க­ளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 
முதல் 4 இடங்­களை பிடிக்கும் அணிகள் அரை­யி­றுதிப் போட்­டிக்கு முன்­னேறும். எதிர்­வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி வரை லீக் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. 
முப்­பது தினங்கள் நீடிக்­க­வுள்ள மகளிர் உலகக் கிண்­ணத்தில் மொத்தம் 28 லீக் போட்­டி­களும் 2 அரை­யி­றுதிப் போட்­டி­களும் சம்­பி­யனைத் தீர்­மா­னிக்கும் இறுதிப் போட்­டி­யு­மாக மொத்தம் 31 போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. 
இந்தத் தொடரின் முத­லா­வது அரை­யி­றுதிப் போட்டி எதிர்­வரும் ஜூலை மாதம் 18ஆம் திக­தியும், 2-ஆவது அரை­யி­றுதிப் போட்டி 20ஆம் திக­தியும் நடை­பெ­று­கின்­றன. இறு­திப்­போட்டி எதிர்­வரும் ஜூலை மாதம் 23ஆம் திகதி லண்­டனில் நடை­பெ­று­கின்­றது.
தொடக்க நாளான இன்று இரண்டு ஆட்­டங்கள் நடக்­கி­றன. இதில் இந்­தியா -இங்­கி­லாந்து, நியூ­ஸி­லாந்து –- இலங்கை ஆகிய அணிகள் மோது­கின்­றன.
இலங்­கையில் நடை­பெற்ற மகளிர் உலகக் கிண்ண தகு­திகாண் சுற்றில் சிறப்­பாக விளை­யா­டி­யதன் மூலம் மகளிர் உலகக் கிண்ணப் போட்­டியில் விளை­யாட இலங்கை மகளிர் அணி தகு­தி­பெற்­றது. 
கடந்த இரண்டு வரு­டங்­களில் வெகு­வாக முன்­னே­றி­யுள்ள இலங்கை மகளிர் அணி இம்­முறை திற­மையை வெளிப்­ப­டுத்த எதிர்பார்த்­துள்­ளது.
இலங்கை அணி வரு­மாறு-: 
இனோகா ரண­வீர (அணித் தலைவி), பிர­சா­தனி வீரக்­கொடி (துணைத் தலைவி), சமரி அத்­த­பத்து, சந்­திமா குண­ரட்ன, நிப்­புனி ஹன்­சிகா, அமா காஞ்­சனா, ஏஷானி லொக்­கு­சூ­ரிய, ஹர்­ஷிதா மாதவி, டிலானி மனோ­தரா, ஹசினி பெரேரா, சமரி பொல்­கம்­பொல, உதே­ஷிகா ப்ரபோ­தனி, ஓஷாதி ரண­சிங்க, ஷஷி­கலா சிறி­வர்­தன, ஸ்ரீபாலி வீரக்­கொடி.
இந்தத் தொடரில் ஆறு தட­வைகள் சம்­பி­யனும் நடப்பு சம்­பி­ய­னு­மான அவுஸ்­தி­ரே­லியா, இம் முறை சம்­பியன் பட்­டத்தை தக்­க­வைப்­ப­தற்கு அனு­கூ­ல­மான அணி­யாகக் காணப்­ப­டு­கின்­றது. 
இளம் வீராங்­க­னை­க­ளையும் அனு­ப­வ­சா­லி­க­ளையும் கொண்ட அவுஸ்­தி­ரே­லிய அணி மிகவும் பலம்­வாய்ந்த ஒன்­றாகும்.
மற்­றொரு பலம்­வாய்ந்த அணி­யாக இங்­கி­லாந்து மகளிர் அணி திகழ்­கின்­றது. சொந்த நாட்டில் விளை­யா­டு­வது இங்­கி­லாந்­திற்கு கூடுதல் பலமாகும்.
சர்­வ­தேச மகளிர் கிரிக்கெட் அரங்கில் கடந்த சில வரு­டங்­களில் வெகு­வாக முன்­னே­றி­யுள்ள அணி தென்­னா­பி­ரிக்க மகளிர் அணி­யாகும். இந்த சுற்­றுப்­போட்­டியில் வெற்­றி­பெ­று­வ­தற்கு அனு­கூ­ல­ மான அணி­யாகத் தோன்­றா­த­ போ­திலும் மாறு­தல்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வல்­லமை கொண்ட அணி­யாகக் கரு­தலாம்.
அதேபோல் மேற்­கிந்­தியத் தீவுகள் மகளிர் அணியும் பலம் ­பொ­ருந்­திய அணி­யா­கவே காணப்­ப­டு­கின்­றது. இரு­ப­துக்கு 20 உலகக்கிண்­ணத்தின் நடப்பு சம்­பி­யனும் அந்த அணிதான் என்­பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

MAM.Thanis Shihab. Blogger இயக்குவது.