அச்சிடப்பட்ட தமிழ் எழுத்துக்களை டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்றலாம்.
இன்று அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களானது ஏனையவர்களுடன் தொடர்பு
கொள்வதற்கு மாத்திரமின்றி இன்னும் ஏராளமான பயன்களை பெற்றுக் கொள்வதற்கும்
உதவுகின்றது.
அந்தவகையில் பத்திரிகைகளிலோ, சஞ்சிகைகளிலோ, துண்டுப் பிரசுரங்களிலோ அல்லது ஏனைய அச்சிடப்பட்ட ஆவணங்களிலோ இருக்கக்கூடிய தமிழ் எழுத்துக்களை டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்றிக்கொள்ள உதவுகிறது "டெக்ஸ்ட் பய்ரி" எனும் ஆண்ட்ராய்டுஸ்மார்ட் போன்களுக்கான அப்ளிகேஷன்.
இது தமிழ், ஆங்கில மொழிகளுக்கு மாத்திரம் அல்லாது இன்னும் ஏராளமான மொழிகளுக்கும் ஆதரவளிக்கின்றது.
டெக்ஸ்ட் பய்ரி அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி?
முதலில் குறிப்பிட்ட அப்ளிகேஷனுக்கு தமிழ் மொழியை தரவிறக்கி உள்ளிட வேண்டும் இதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.
1. உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்ட டெக்ஸ்ட் பய்ரி அப்ளிகேஷனை திறந்து கொள்க.
2. பின் அதன் இடது மேல் மூளையில் தரப்பட்டுள்ள சிறிய மூன்று கோடுகளாலான மெனு குறியீட்டை சுட்டுக.
3. பின்னர் அதில் தோன்றும் Add Language என்பதை சுட்டுக.
4. இனி தோன்றும் Manage Language எனும் பகுதியின் ஊடாக தமிழ் மொழியை தெரிவு செய்து அதனை தரவிறக்கிக் கொள்க.
இனி டெக்ஸ்ட் பய்ரி அப்ளிகேஷனில் தமிழ் மொழியை பயன்படுத்தலாம்.
அச்சிடப்பட்ட எழுத்துக்களை டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்ற பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.
1. டெக்ஸ்ட் பய்ரி அப்ளிகேஷனின் வலது மேல் மூலையில் இருக்கும் கேமரா குறியீட்டை சுட்டுக.
2. இனி திறக்கப்பட்ட கேமரா மூலம் அச்சிடப்பட்ட எழுத்துக்களை கொண்ட ஆவணத்தை புகைப்படம் எடுக்க.
3. பின் அந்த புகைப்படத்தில் தரப்பட்டுள்ள நான்கு மூளைகளை கொண்ட கட்டங்களை பயன்படுத்தி நீங்கள் டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்ற விரும்பும் பகுதியை மாத்திரம் தெரிவு செய்க.
4. பின்னர் அதன் வலது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள அம்புக்குறி அடையாளத்தை சுட்டுக.
5. இனி தோன்றும் சிறிய சாளரத்தின் மூலம் குறிப்பிட்ட ஆவணம் அமைந்திருக்கும் மொழியை தெரிவு செய்து Start என்பதை அலுத்துக
அவ்வளவுதான்..!
இறுதியில் இவ்வாறு பெறப்படும் டிஜிட்டல் வடிவில் அமைந்த எழுத்துக்களை PDF ஆவணமாக உருவாக்கிக் கொள்வதற்கும் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றின் ஊடாக பகிர்ந்து கொள்வதற்கும் டெக்ஸ்ட் பய்ரி எனும் இந்த அப்ளிகேஷனில் வசதி தரப்பட்டுள்ளது.
இந்த அப்ளிகேஷன் ஆசிரியர், மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை
உதவிக் குறிப்புகள்:
இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் ஆவணங்களை புகைப்படம் எடுக்கும் போது ஆவணத்தை சரியான தூரத்தில் வைத்த பின் உங்கள் ஸ்மார்ட் போனின் திரையை சுட்டுக. இதன் மூலம் குறிப்பிட்ட ஆவணத்தை தெளிவாக புகைப்படம் எடுக்க முடியும்.
இதனை மேற்கொள்வதற்கு 5 தொடக்கம் 7 மெகா பிக்சல் வரையான தெளிவுத்திறன் கொண்ட கேமராவும் போதுமானது.
வெள்ளை நிற பின்புலத்தில் கருப்பு நிற எழுத்துக்களை கொண்ட ஆவணங்கள் சிறந்த முடிவுகளை பெற்றுத்தரும். மாறாக பல வர்ணங்களில் அமைந்த எழுத்துக்களை கொண்ட ஆவணங்கள் சிறந்த முடிவுகளுக்கு உதவியாக அமையாது.
இதன் மூலம் பெறப்படும் முடிவுகள் நூற்றுக்கு நூறு சதவீதம் சரியாக அமையும் என கூறி விட முடியாது. ஒரு சில எழுத்துக்கள் மாறுபட்டதாக அமையலாம். இருப்பினும் அவ்வாறு மாறுபட்டதாக அமைத்துள்ள எழுத்துக்களை ஸ்மார்ட் போனில் உள்ள கீபோர்டை பயன்படுத்தி சரியானதாக திருத்தி அமைத்துக் கொள்ளலாம். தமிழ் மொழியை தட்டச்சு செய்ய கூகுள் தரும் கூகுள் இன்புட் டூல்ஸ் கீபோர்டை பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை: