பேஸ்புக்கில் பொய் நண்பர்களை கண்டறிவது எப்படி?
பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ராபின் டன்பர் பேஸ்புக் நண்பர்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டதில் கிடைத்த தகவல்களின் படி
பேஸ்புக்கில் இருக்கும் 150 நண்பர்களில் 15 நண்பர்கள் மட்டுமே உங்களுக்கு
தெரிந்த நண்பர்கள் அதில் உங்களைப் பற்றி கவலைப்படுபவர்கள் 5 பேர்
மட்டுமே! மற்றும் உங்கள் நண்பர் பட்டியலில் 27 சதவிகிதம் மட்டுமே
உண்மையானவர்கள் என்ற தகவலை அளித்துள்ளார்.
ஒரு பெண் profile படம் வைத்து நட்பு அழைப்பு வந்தால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அந்த நபரின் புரொபைல் படத்தின் இட முகவரியை காப்பி செய்து google image
search இல் தேடி அது உண்மையான படமா இல்லை வேறு நபரின் படமா என எளிதில்
பார்த்துவிடலாம்.
ஆபாசமாக பேச, பிறரை திட்ட, ஏமாற்ற, கண்காணிக்க என ஒரு நபரே வேறு சில
புரொபைல் வைப்பதும் வெகு பரவலாக இருக்கிறது. உங்களுக்கு ஏதேனும் ஆபத்து
என்றால் முதலில் வருவோர் உங்கள் நிகழ் கால நண்பர்கள் மட்டுமே, நிழல் உலக
நண்பர்கள் ஒரு லைக் போட்டுவிட்டு போய்விடுவார்கள் என இந்த ஆய்வு சொல்கிறது.
கருத்துகள் இல்லை: