பாதியாக குறையும் ஐபோன் விலை...
இன்னும் கிட்ட தட்ட 10 நாட்களில் அதாவது மார்ச் 21 ஆம் தேதி புதிய ஐபோன் கருவி வெளியாகும் என உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றது. இந்நிலையில் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறினால் ஐபோன் விலையானது இந்தியாவில் பாதியாக குறையும் என கூறப்படுகின்றது.
ஆப்பிள் சார்ந்த தகவல்களை ஆராய்வதில் பிரபலமான கேஜிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மிங்-சி-கியோ ஐபோன் எஸ்இ கருவி வெளியானால் ஐபோன் 5எஸ் கருவியின் விலை 50 சதவீதம் வரை குறைய வாய்ப்புகள் இருப்பதாக தன் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஐபோன் 5எஸ் கருவியின் விலை ரூ.21,500இல் இருந்து 50 சதவீதம் குறைக்கப்பட்டு விடும். பின் ஐபோன் 5எஸ் கருவியின் விலை ரூ. 12,000 - 13,000 வரை இருக்கலாம். இவ்வாறு விலை குறைக்கப்பட்டால் ஆண்ட்ராய்டு கருவிகளுக்கு பலத்த ஐபோன் 5எஸ் கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.
ஐபோன் 5எஸ் கருவியின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4 இன்ச் டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ7 சிப் டூயல்-கோர் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 1560 எம்ஏஎச் பேட்டரியும் கொண்டிருக்கின்றது.
கருத்துகள் இல்லை: