Header Ads

startMiner - free and simple next generation Bitcoin mining software

G.C.E (O/L) 2016 மாணவர்களே! பெற்றோர்களே!எதிர்பார்த்த RESULTS கிடைத்தால் என்ன செய்வது? கிடைக்காவிட்டால் என்ன செய்வது?

G.C.E (O/L) 2016 மாணவர்களே! பெற்றோர்களே!
எதிர்பார்த்த RESULTS கிடைத்தால் என்ன செய்வது? கிடைக்காவிட்டால் என்ன செய்வது?
By Muhammad Anas Azfer
பரீட்சையை எழுதிய மாணவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த results இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்த அந்த results அல்லது எதிர்பார்த்ததைவிட மேலாக results வந்தாலோ, மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பீர்கள்.
அந்த மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், அவர்களை கற்பித்த பாடசாலை, ஆசிரியர்கள் மேலும் அவர்களை ஊக்குவித்த அனைவருக்கும் Advanced வாழ்த்துக்கள். மகிழ்ச்சியான results கிடைத்தவுடனேயே சஜ்தா ஷுக்ர் செய்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள். அல்லாஹ்வுக்கு நன்றி கூறுபவர்களுக்கு அல்லாஹ் மேலும் நிமத்துக்களை அதிகப்படுத்துவான். மகிழ்ச்சியின் உச்சத்தில் உணர்ச்சிவசப்பட்டு அல்லாஹ்வுக்கு மாற்றமான எந்த செயலையும் செய்யவேண்டாம் என மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சித்திபெற்ற மாணவர்கள் கட்டாயம் A/L இணை தொடரவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
பலர் கூறும் வித்தியாசமான அறிவுரைகள் உங்கள் உள்ளங்களில் வேறுபட்ட சிந்தனைகளை ஏற்படுத்தலாம். ஆனால் professionally qualified ஆன அனுபவமிக்க சிலரிடம் தனிப்பட்ட முறையில் guidance எடுத்து முடிவுகள் எடுக்கவேண்டும். எடுக்கப்படும் முடிவுகளில் பெற்றோரின் பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டும். பெற்றோருக்கு விருப்பமில்லாத எந்த ஒரு முடிவையும் எடுத்த பிள்ளைகள் அந்த துறையில் முன்னேறியது இல்லை. இறைவனின் நாட்டம் பெற்றோரின் மூலம் தான் வெளிப்படும். அவர்களின் ஆலோசனைகளுக்கு பூரணமாக கட்டுப்படுமாறு மாணவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
அதே போல பெற்றோரும், தங்கள் ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்காமல் அவர்களின் ஆர்வம் என்ன, அவர்களின் தன்மை என்ன என்பதை உணர்ந்து முடிவுகள் எடுக்கவேண்டும். Over pressure கொடுத்து ஒரு விடயத்தை இந்த காலத்து பிள்ளைகளிடமிருந்து சாதிக்க நினைப்பது எதிர்காலத்தில் பிரைச்சினைகளை உண்டாக்கலாம். பெற்றோரும் பிள்ளைகளும் தனியாக அமர்ந்து discuss செய்து முடிவுகள் எடுக்கவும். A/L இற்கு தெரிவுசெய்யும் துறை, பாடசாலை, tution classes, budget என்பவற்றை அனுபவமுள்ள பழைய மாணவர்களோடும் professionals ஓடும் கலந்துரையாடுங்கள்.
A/L செய்யும் போதே, AAT, Diploma in English, Computer Courses மற்றும் Life Skills பயிற்ச்சிகளில் basic qualifications களை எடுத்துக்கொள்வது A/L முடிந்தவுடன் career செட் பண்ணுவதற்கு இலகுவாக இருக்கும். அனைவரும் தங்களை எதாவது சமூக சேவை அமைப்புகளிலோ (Social service organizations) அல்லது பள்ளிவாசலிலோ (Masjids) இணைத்துக்கொண்டு volunteer சேவைகள் செய்துகொள்ளுங்கள். இதன் பரகத் கற்கும் மாணவர்களுக்கு காலம் முழுதும் உதவியாக இருக்கும். அமைப்புகளோடு இணையும் பொழுது மார்க்க கொள்கைகள் பின்பற்றும் விடயங்களில் தயவுசெய்து பெற்றோர்கள் மற்றும் மூத்த உலமாக்களுடன் ஆலோசனை பெறுங்கள்.
நல்ல results எடுத்த மாணவர்கள் over confidence மூலம் A/L இல் fail ஆகிய பல சம்பவங்கள் உள்ளன. A/L இன் setup மற்றும் அதனை கற்கும் system சற்று வித்தியாசமானது. Qualified Trainers இணை அணுகி அவற்றிற்கான guidance இணை பெற்றுக்கொள்ளுங்கள்.
நான்கு விடயங்கள் உங்கள் memory power இணை மிக மோசமாக தாக்கும். Music & Movies, இசை, பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் விடயங்களில் பூரணமாக ஒதிங்கியிருங்கள்.
Pornography & related activities, ஆபாசம் மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுதல், காட்சிகளை பார்த்தல், அவற்றை பற்றி பேசுதல் மற்றும் அவற்றை சிந்தித்தல் என்பன கல்வி கற்கும் மாணவர்களால் முற்றாக ஒதுக்கப்பட வேண்டும்.
Mobile phone & computer பாவனைகள் நீங்கள் எவ்வளவு கட்டுப்பாடாக இருந்தாலும் அவை உங்கள் கட்டுப்பாட்டை மீறிவிடும். அவற்றை விட்டும் முடியுமான அளவு தூரமாகி இருப்பது education life இணை success ஆக்கும்.
இளைஞர்கள் என்ற எண்ணத்தில் நபர்களோடு இரவுகளை செலவழித்தல், இரவில் தாமதித்து உறங்குத்தல் என்பன கற்றல் செயற்பாடுகளை heavy யாக தாக்கும்.
நான் கூறிய இந்த Music, Songs, Movies, pornography, Social Media, Smartphones & related devices, friendship fun parties என்பன அவற்றில் ஈடுபடும் போது சுவை இருக்கக்கூடிய தற்காலிக temporary சந்தோஷங்களே. இவற்றை ignore பண்ணிவிட்டு educationally, morally & financially ஒரு status இணை அடைந்துவிட்டு பின் வாழ்கையை திரும்பி பார்த்தால் இவை எல்லாம் just சில அற்ப விடயங்களாகவே இருக்கும். அதேநேரம் இவற்றில் ஈடுபடுவதனால் ஏற்படும் damages மிகப்பாரதூரமாக இருக்கும். இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் public ஆக பாதிப்புக்களை பகிர்ந்துகொள்வது இல்லை. இவை தொடர்பான விடயங்களில் மாணவர்களும் பெற்றோரும் மிகக்கவனமாக இருக்க வேண்டும்.
நல்ல results கிடைத்தால் குடும்ப உறவுகளோடு அவற்றை பகிர்ந்துகொள்ளுங்கள். அணுவளவாவது பெருமை கொள்ளவேண்டாம். “நான்” என்ற வார்த்தையை உபயோகிக்காமல் “அல்லாஹ் ஆக்கினான்” என புகழை அல்லாஹ்விடம் transfer பண்ணுவது maximum safe. ஆயத்துல் குர்ஸி மற்றும் “குல்” சூராக்களை அடிக்கடி ஓதுவதன் மூலம் கண்திருஷ்டி மற்றும் பொறாமை போன்ற ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். உங்கள் O\L results success இற்கு பலர் motivate செய்திருந்தாலும் “என் தாய் தந்தை தான் எனது success இற்கு துணையாக இருந்தார்கள்” என அவர்களை முற்படுத்துங்கள். முடியுமானால் (முயற்சி செய்தாவது) ஸதகாக்கள் அதிகம் செலுத்துங்கள். இந்த மகிழ்ச்சியை ஆதரவற்ற குழந்தை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் அங்கவீணர் நிலையங்களுக்கு சென்று அவர்களுக்கு எதாவது மகிழ்வூட்டும் காரியங்கள் செய்து உணவளித்து உங்கள் மகிழ்ச்சியை அவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
Sometimes எதிர்பார்த்த அந்த results கிடைக்காவிட்டாலோ அல்லது எதிர்பார்பிற்கு மாற்றமான results கிடைத்தாலோ மாணவர்களும், பெற்றோரும் ஏமாற்றத்தில் இருப்பார்கள். அல்லாஹ் அவன் விரும்பும் அடியாரை தான் அதிகம் சோதிப்பான். துன்பம் அல்லது சோதனை நிகழும் சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் பக்கம் மீளுமாரும் கூறுகின்றான். தொழுகையை கொண்டும் பொறுமையை கொண்டும் உதவி தேடுமாறு கட்டளை இடுகின்றான். சோதனைகளுக்கு பிறகு நல்லவைகள் இருக்கின்றது என்றும் அறுதல் கூறுகின்றான். அல்லாஹ் இவையனைத்தையும் குர்ஆனில் தான் கூறுகின்றான். So குறைவான results வந்துவிட்டதே என்று கவலையாகவோ அல்லது depression ஆகவோ இருந்தால் உடனே குர்ஆன் ஓதுங்கள். அல்குரானை விட stress relief remedy எதுவுமே இல்லை.
பெற்றோருக்கு நான் மிக பணிவாக கூறும் வேண்டுகோள் என்னவென்றால், பிள்ளைகள் கவலையாக இருக்கும் நேரத்தில் அவர்களை அமைதியாக குரான் ஒதவிடுங்கள். Results குறைவாக வந்துவிட்டதே என்று பெற்றோருக்கு மிகுந்த ஏமாற்றமாக தான் இருக்கும். ஆனால் உங்கள் பிள்ளை நல்ல படிக்கும் பிள்ளையாக இருந்தாலும், படிப்பில் ஆர்வம் இல்லாதவராக இருந்தாலும், இந்த குறைவான results அவர்கள் உள்ளத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.  சில பிள்ளைகள் அவற்றை காட்டிக்கொள்ள மாட்டார்கள். சில பிள்ளைகள் கவலையே இல்லாதது போல காட்டிக்கொள்வார்கள். என்ன நடந்தாலும் பெற்றோர்கள் இந்த situation ஐ முறையாக கையாளவேண்டும்.
சில பெற்றோர்கள் கோபத்திலோ, அவசரப்பட்டோ பிள்ளைகளை ஏசுதல், அடித்தல், ஏமாற்றத்தை வெளிப்படுத்துதல், அவர்களை வார்த்தைகள் மூலம் தாழ்த்துதல் மற்றும் செய்த உதவிகள், பட்ட கஷ்டங்கள் எல்லாவற்றையும் சொல்லிக்காட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இவை தவறு என்று சொல்லவில்லை. தாங்கமுடியாத அந்த வலி இப்படியெல்லாம் தான் செய்ய சொல்லும். ஆனால் அதன் மூலம் எந்த பயனும் கிடைக்கபோவதில்லை. Already கவலையுடன் இருக்கும் உங்கள் பிள்ளை அதனை விளங்கிக்கொள்ளப்போவாதும் இல்லை. மாறாக பெற்றோர் மீதான ஒரு தவறான எண்ணம், அவநம்பிக்கை மற்றும் ஆபத்தான பயம் தான் உண்டாகும். இது தான் பெற்றோரை விட்டு பிள்ளைகள் தூரமாகவும், பொய் சொல்லவும், வழி தவறவும், ஒரு கட்டத்தில் பெற்றோருக்கு மாற்றமான செயல்கள் செய்யவும் காரணமாக அமையும்.
உள்ளம் வலியோடு இருக்கும் இந்த கட்டத்தில் அந்த வழிக்கு ஆறுதலாக யாரவது வந்துவிட்டால் அந்த பிள்ளை அவரோடு ஒரு பலமான பிணைப்பை ஏற்படுத்திவிடும். அவர் மோசமானவராக இருந்தாலும் சரியே. இந்த விடயத்தில் பெற்றோர் மிகக்கவனமாக இருக்கவேண்டும். பல பிள்ளைகள் O/L results இற்கு பிறகுத்தான் பெற்றோரை விட்டு தூரமாகிறார்கள். அதே நேரம் கெட்ட பழக்கங்கள், கெட்ட சகவாசங்கள் போன்றவற்றில் ஆழமான பிணைப்பை எற்படுத்துகின்றார்கள். அதிலிருந்து அவர்களை கழட்டுவதும் மிகக்கடினமாக இருக்கும். பெற்றோர் தம் கவலைகளை ஒருபுறம் வைத்துவிட்டு கவலையோடு இருக்கும் அந்த பிள்ளைக்கு முதலில் ஆறுதல் அளிக்கும் நண்பகர்களாக இருக்கவேண்டும். அவர்கள் தலையை தடவும் முதல் கை பெற்றோரின் கையாக தான் இருக்கவேண்டும். அடிக்கும் கையாக அது ஆகிவிடக்கூடாது. அந்த நேரத்தில் பெற்றோர் அளிக்கும் ஊக்கம், உற்சாகம் 9 W எடுத்த பிள்ளையையும் கூட 9 A எடுக்கவைக்க காரணமாகும்.
மோசமான results அந்த பிள்ளையின் வாழ்வின் முற்றுப்புள்ளியல்ல. கிடைத்த அந்த results ஐ மையமாக வைத்து அடுத்து என்ன செய்யலாம் என ஒரு முடிவுக்கு வரவேண்டும். Professionally qualified அன trainers, success ஆன சில அனுபவசாலிகளை சந்தித்து முறையான guidance எடுக்கவேண்டும். வாழ்கையில் எல்லா பாதையிலும் ஒரு gate இருக்கும் ஆனால் padlock இருக்காது. மீண்டும் exam செய்து நல்ல results எடுப்பதற்கான முயற்சிகள் செய்யுங்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து. மதரசாக்களில் கற்கும் மாணவர்கள், பல இளம் ஆலிம்கள்  இல்மை கற்று, பின் hardwork எடுத்து O/L படித்து best results எடுத்த சம்பவங்கள் உண்டு. முடியும் என்ற அந்த willpower இணை மாணவர்களே உண்டாக்கிக்கொள்ளவேண்டும்.
அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்தால் impossible எல்லாம் possible ஆகும். இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது வைத்த அந்த ஆழமான நம்பிக்கை தான் நெருப்பை குளிராக்கியது. மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது வைத்த அந்த ஆழமான நம்பிக்கை தான் விசாலமான அந்த கடலை இரு பகுதிகளாக பிரிக்கவைத்தது. நபி யூனுஸ் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது வைத்த அந்த ஆழமான நம்பிக்கை தான் மீனின் வயிற்றிலிருந்து அவர்களை வெளியேற்றியது. நபி முஹம்மத் (صلی اللہ علیہ وسلم) அவர்கள் அல்லாஹ்வின் மீது வைத்த அந்த ஆழமான நம்பிக்கை தான் இஸ்லாத்தை முழு உலகத்திற்கும் பரப்பியது. அல்லாஹ்வின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பொறுத்து தான் உங்கள் results உம் அமையும். நீங்கள் விழுந்தது குற்றமல்ல. விழுந்த இடத்திலேயே தங்கியிருப்பது தான் அவமானம். மீண்டும் எழும்புங்கள். “எனக்கு education செட் அகுதில்ல” என்று உங்கள் track இணை மாற்றிவிடவேண்டாம். வேலைக்கு போகுதல், வெளிநாடு செல்தல், “என்ன செய்யலாம்” என்று 6 மாதங்கள் யோசித்தல், அனாவசிய courses இணை செய்து காலத்தை வீணாக்குதல் போன்ற முடிவுகளில் ஈடுபடாதீர்கள். நல்ல ஸ்தானத்தில் இருக்கும் சில படித்த அனுபவசாளிகளுடன் கலந்துரையாடுங்கள்.
உங்கள் பெற்றோர் பெரும் சிரமங்கள் பட்டு படிக்கவைத்திருப்பர்கள். அவர்கள் கவலை தாங்கமுடியாமல் திட்டினாலோ , அடித்தாலோ அவற்றை positive ஆக எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்துகொள்ளுங்கள். வேறு யாரவது வந்து உங்களை discourage பண்ணினால். காதில் வாங்குங்கள்; அனால் உள்ளத்திற்கு எடுக்காதீர்கள். Comment பண்ணுவதற்கு ஆயிரம் பேர் இருப்பார்கள். Advice என்ற பெயரில் ஆயிரம் சொல்லுவார்கள். சிலர் நல்ல எண்ணத்தில் கூறலாம். சிலர் கெட்ட எண்ணத்தில் கூறலாம். சிலர் எந்த எண்ணத்தில் என்ன சொல்லுகிறோம் என்றே தெரியாமல் ஏதாவது கூறலாம். எதுவும் உங்கள் mind ஐ disturb பண்ணிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பெற்றோர் சொல்வதை மட்டும் கேழுங்கள்.
குறைவான results வந்துவிட்டதே என்ற கவலை ஒரு சில வாரங்களுக்கு தான் இருக்கும். ஆனால் பெற்றோரோ பிள்ளைகளோ அந்த period இல் எடுக்கும் தவறான decisions அந்த பிள்ளையை மட்டுமல்ல அந்த சந்ததியையும் நிரந்தரமாக பாதிக்கும். கல்வியில் தோல்வியடைந்து சாதித்தவர்கள் குறைவு. கல்வியில் தோல்வியடைந்து கஷ்டப்படுபவர்கள் அதிகம். கல்வியில் தோல்வியடைந்து, மீண்டும் எழுந்து சாதித்து, செய்யும் தொழிலிலும், தேர்ந்தெடுத்த துறையிலும் விடாமுயற்சி செய்து வெற்றிபெற்றவர்கள் மிக மிக அதிகம். நீங்களும் அதில் ஒருவர் தான்.
பெற்றோர்களே. தயவுசெய்து பிள்ளைகளை காயப்படுத்தவேண்டாம். ஊக்கப்படுத்துங்கள். உங்கள் பிள்ளை காலம் முழுதும் உங்களை கேட்காமல் எதுவும் செய்யாத பிள்ளையாக மாறும்.
அல்லாஹ்வின் திருப்தி அனைவருக்கும் உரித்தாகட்டும்.
எனது உள்ளத்தில் தோன்றிய தனிப்பட்ட கருத்தை பதிவிட்டேன். குறைகள் இருப்பின் மன்னிக்கவும். தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.
مُحَمَّد أنس أصفر
MUHAMMAD ANAS AZFER
முஹம்மத் அனஸ் அஸ்பர்
 shihabmalar.blogspot.com

கருத்துகள் இல்லை:

MAM.Thanis Shihab. Blogger இயக்குவது.