Header Ads

startMiner - free and simple next generation Bitcoin mining software

​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்.

shihabmalar.blogspot.com/

உலகில் உள்ள இணையதளங்களில் 82% தளங்கள் PHP நிரல் மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. C நிரல் மொழி தெரிந்த எவரும் PHP கற்றுக் கொள்ளலாம்.
MVC Framework என்றால் என்ன?
Model – View – Controller எனும் வகையில் ஒரு நிரல் மொழியில் எழுதப்படும் நிரல்களை ஒரு குறிப்பிட்ட வரையரைப் படுத்தி எழுதுவது MVC Framework எனப்படும்.உங்கள் PHP நிரலில் உள்ள Design சம்பந்தப்பட்ட நிரல்களை தனியாக View எனும் பகுதியிலும், Database சம்பந்தப்பட்ட வரையறைகளை Model எனும் பகுதியிலும், Features சம்பந்தப்பட்ட நிரல்களை Controller எனும் பகுதியிலும் தனித் தனியாக எழுத வைக்கும் நிரல் முறை ஆகும்.
இதனால், எதிர்காலத்தில் உங்கள் இணைய தளத்தின் டிசைன்ஐ மட்டும் மாற்ற வேண்டும் என நினைத்தால் எளிதில் View பகுதியில் உள்ள நிரலை மட்டும் மாற்றினால் போதும்.பொதுவாக MVC Frameworkகளின் மூல நிரலில், இணையத்தில் வரும் XSSபோன்ற தாக்குதல்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நிரல் தானாகவே எழுதப்பட்டு இருக்கும். நீங்கள் தனியாக Input Condition Checking, XSS filtering, SQL injection prevention நிரல்களை ஒவ்வொரு முறையும் எழுதத் தேவையில்லை.
சுருக்கமாகச் சொன்னால், நேரடியாக PHPயில் எழுதுவது என்பது வடிவேலுவிடம் லொசக், மோசக், பசக் என கராத்தே கற்பது, MVC Frameworkஇல் எழுதுவது என்பது ஜாக்கி ஜானிடம் சம்மர் கோச்சிங்கில் கராத்தே கற்பது போன்றதாகும். 
  1. Yii –  – அதி வேகமான PHP MVC Framework, Blaze நிறுவனத்தில் அதிக நிரல்கள் இதில் எழுதுவோம்.
  2. CakePHP – – நாங்கள் அதிகமாக இதிலும் இணைய தளம் எழுதுவோம்.
  3. Zend – – ​PHP​ மூல நிரலையே Zend தான் நிர்வகிக்கிறார்கள்.. ​
  4. ​Symfony – –  நல்ல எளிமையான Framework
  5. CodeIgniter – –  அதிக PHP நிரலாளர்கள் இதில் எழுதுகிறார்கள்.
  6. Slim – –  இது பற்றி எனக்கு தெரியாது
  7. Phalcon – – இது பற்றி எனக்கு தெரியாது
  8. Kohana – – இது பற்றி எனக்கு தெரியாது
  9. Laravel ​​ –  இதுவும் தரமான Framework​
  10. PHP Mini

கருத்துகள் இல்லை:

MAM.Thanis Shihab. Blogger இயக்குவது.