Header Ads

startMiner - free and simple next generation Bitcoin mining software

இலங்கை-அவுஸ்திரேலிய இறுதி ஒரு நாள் போட்டி நாளை பல்லேகலவில்.

இலங்கையின் இடது கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உப்புல் தரங்க மீண்டும் இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இரு அணிகளும் மோதும் கடைசியும் இறுதியுமான ஒரு நாள் போட்டி நாளை 4ம் திகதி பல்லேகல சர்வதேச மைதானத்தில் பலிரவுப்போட்டியாக இடம்பெறவுள்ளது.
அவுஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரை பறிகொடுத்துள்ள இலங்கை அணி இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் செயற்பட்டு வருகிறது.
நட்சத்திர துடுப்பாட்ட வீரர் திலக்கரட்ண தில்ஷானின் ஓய்வு இலங்கை அணிக்கு மிகுந்த பின்னைடைவை கொடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
எனினும் தில்ஷானின் இடத்திற்கு சகலதுறை வீரர் சசித் பத்திரண அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உப்புல் தரங்க மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஆயினும் ‘ஸ்ரீலங்கா கிரிக்கெட்’ இதுவரை இதனை உறுதிப்படுத்தவில்லை.
இதனிடையே உபாதை காரணமாக அவதிப்படும் அணித் தவைவர் மெத்தீயூஸ் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி, மற்றும் இருபதுக்கு 20 தொடரில் விளையாடமாட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உப்புல் தரங்க இதுவரை 187 ஒருநாள் போட்டிகளிலும் 10 ரி 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இறுதியாக இவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் தசைப்பிடிப்பு உபாதையால் அவுஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இறுதி ஒருநாள் போட்டி மற்றும் 2 ரி 20 சர்வதேசப் போட்டிகளிலும் அஞ்சேலோ மத்தியூஸ் பங்கு கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஸ்ரீலங்கா கிரிக்கட்’ இன்னும் அஞ்சேலோ மத்தியூஸ்ற்குப் பதிலாக மாற்று வீரரை அணிக்கு அழைக்காத நிலையில் உப்புல் தரங்க அணிக்கு அழைக்கப்படலாம் என்று அறியக் கிடைக்கிறது.
அணித்தலைவர் மத்தியூஸ் 4வது ஒரு நாள் போட்டியில் 40 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார்.பின்னர் களத்தடுப்பில் ஈடுபடாத நிலையில் அணியை சந்திமால் வழிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்துவரும் மீதமான போட்டிகளில் தலைமைப் பதவியை தினேஷ் சந்திமால் வகிக்கவுள்ளார்.அவுஸ்திரேலிய அணியில் எந்தவித மாற்றமும் இடம்பெறாது என தெரியவருகிறது.இலங்கை அணி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கவுள்ளது.

கருத்துகள் இல்லை:

MAM.Thanis Shihab. Blogger இயக்குவது.