Header Ads

startMiner - free and simple next generation Bitcoin mining software

உலகமே எதிர்ப்பார்த்த ஐ-போன் 7 (iPhone-7 ) அறிமுகம் (வீடியோ).

உலகமே எதிர்ப்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஐ போன் 7, ஐ போன் 7 பிளஸ், ஆப்பிள் வொட்ச் சீரீஸ் 2 ஆகிய புதிய தயாரிப்புகள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.

மொபைல் போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், வழக்கமாக செப்டம்பர் மாதத்தில், புதிய போன்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தும். அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 6 மற்றும் 6 எஸ் போன்கள் அறிமுகப்படுத்தியது. அதே போன்று இந்தாண்டின் ஐபோன் 7 மாடல்கள், வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என கடந்த மாதம் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று புதிய மாடல்களான ஐபோன் 7, ஐ போன் 7 பிளஸ், மற்றும் வொட்ச் சீரீஸ் 2 மாடல்கள் அறிமுகப்பட்டுத்தப்பட்டன.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த அறிமுக விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம்குக் ஐபோன்களை அறிமுகம் செய்து, அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் விளக்கினார்.

சூப்பர் மெரியோ ரன்:
ஆப்பிள் ஐபோன் 7 ல் உலகில் பிரபலமான மரியோ கேம் அறிமுகமாகிறது. மக்கள் அதிகம் இந்த விளையாட்டை பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் வொட்ச் சீரிஸ்2:
ஆப்பிள் வொட்ச் சீரிஸ் 2 அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய ஆப்பிள் வொட்சின் டிசைனில் எந்த வித மாற்றமும் இல்லாமல் தண்ணிருக்குள் 50 மீட்டர் ஆழம் வரை ‛வாட்டர் புரூப்’ மற்றும் ‛ஸ்விம் புரூப்’ அம்சம் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வாட்ச் டூயல் – கோர் பிராசசர் உடன் வேகமாக செயல்படும் திறன் கொண்டது. மேலும் வாட்ச்-ல் ஜி.பி.எஸ்., வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜாக்கிங் மற்றும் ரன்னிங் பயிற்சி பெறுபவர்களுக்கு பயன்பெறும் வகையில் ஆப்பிள் நிறுவனம் நைக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு பல்வேறு மேம்பாடுகளை கொண்ட நைக் பிளஸ் வொட்சை அறிமுகம் செய்துள்ளது.

போக்கிமேன் கோ:
உலகம் முழுவதும சமீபத்தில் மிகவும் பிரபலமான ‛போக்கிமேன் கோ’ விளையாட்டு ஆப்பிள் வொட்சிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் :
ஐபோன் 7 ‛வாட்டர்- டஸ்ட் புரூப்’ வசதியுடன் வருகிறது. இந்த செல்போன் ஜெட் பிளாக், பிளாக், கோல்ட், சில்வர், ரோஸ் கோல்ட் ஆகிய கலர்களில் வெளியாகிறது. ஆப்பிள் 7 பிளஸ்சில் பின்பக்க கேமரா 12 மெகா பிக்சல் தரத்தில் 2லென்ஸ் உடன் வெளியாகியுள்ளது. இந்த 2 லென்ஸ் 56.எம்.எம்., ஆப்டிகல் சூம் வசதிக்காக ஒரு லென்ஸும், வைட் ஆங்கிள் வசதிக்காக மற்றொரு லென்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போன் ஐ.ஓ.எஸ். 10 இயங்குதளத்தில் செயல்பட கூடியது.
ஐபோன்7 மற்றும் 7 பிளஸில் ஸ்டிரியோஸ்பிக்கர் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக ‛வயர்லெஸ் – ஹெட் போன் ‘ வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐபோனில் உள்ள ‛‛சிரி” வசதி இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஐபோன் 7 ல் வை-பை இணைப்புடன் 14-15 மணி நேரம் செயலில் இருக்கும் அளவிற்கு பேட்டரி மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஐ-கிளவுட்:
ஐபோன்7 ஐயும் மற்ற ஆப்பிள் தயாரிப்புகளையும் இனைக்கும் வகையில் ஐ-கிளவுட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்றம் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு ‛பைல்’ பரிமாற்றம்செய்ய முடியும்.

ஆப்பிள் பே:
ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ‛ஆப்பிள் பே’ வை பயன்படுத்தும் வகையில் ‛என்.எப்.சி.,’ டெக்னாலஜி வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம பணபரிமாற்றம் செய்யமுடியும்.

பியுசன் பிராசசர்:
ஐபோன் 7 பியுசன் பிராசசர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிராசசர் சுமார் 3.3 பில்லியன் டிரான்சிஸ்டர்களை கொண்டு செயல்படுகிறது. அதனால் இதன் செயல்திறன் பல மடங்கு அதிகமாக இருக்கும்

அதிக சேமிப்புத்திறன்:
ஐபோன் 7 ல் புதிதாக 128 மற்றும் 256 ஜி.பி., உள்ளடக்க மெமரியுடன் வெளியாகிறது. குறைந்தபட்சமாக 32 ஜி.பி., போனும் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.

Thank you for watching......

கருத்துகள் இல்லை:

MAM.Thanis Shihab. Blogger இயக்குவது.