Header Ads

startMiner - free and simple next generation Bitcoin mining software

எந்த ஒரு மொபைல் சாதனத்தையும் Hard Reset செய்வது எப்படி?

http://shihabmalar.blogspot.com/

  • உங்கள் மொபைல் சாதனம் உங்களை கடுப்பேற்றும் வகையில் மிகவும் மந்த கதியில் இயங்குகின்றதா? அல்லது அடிக்கடி உறைந்து  (Stuck) உங்கள் பொறுமையை சோதிக்கிறதா?
  • அல்லது மொபைல் சாதனத்தின் கடவுச்சொல்லை அண்மையில் மாற்றியதால் அதன் கடவுச்சொல் மறந்து விட்டதா? 
  • உங்கள் Android சாதனத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் நீக்கி அதனை புதிய சாதனத்தை போல் மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களா?
  • உங்கள் Mobile சாதனத்தில் உள்ள உங்களது அனைத்து தரவுகளையும் நீக்கி விட்டு அதனை இன்னுமொருவருக்கு கைமாற்ற உள்ளீர்களா?
     
  • உங்கள் வீட்டிலுள்ள சின்னஞ் சிறுசுகள் உங்கள் மொபைல் சாதனத்தில் உள்ள Pattern Lock ஐ விளையாட்டு பொருளாக பயன்படுத்தியதால் அது மீண்டும் இயங்க மறுக்கின்றதா?

இது போன்ற இன்னும் பல்வேறு இக்கட்டான சந்தர்பங்களில் எமக்கு கை கொடுத்து உதவுகின்றது மொபைல் சாதனங்களில் தரப்பட்டுள்ள Hard Reset எனும் வசதி.


மொபைலில் Hard Reset இணையதளம்


மொபைல் சாதனங்களை Hard Reset செய்வதன் மூலம் அவற்றில் இருக்கக்கூடிய அனைத்து தரவுகளையும் முற்றிலுமாக நீக்கிக் கொள்ள முடிவதுடன் நீங்கள் உங்கள் மொபைல் சாதனத்துக்கு இட்டிருந்த கடவுச்சொற்கள் (Password), அமைப்பில் (Settings) ஏற்படுத்தி இருந்த மாற்றங்கள் என அனைத்தையும் நீக்கி உங்கள் மொபைல் சாதனம் புதிதாக வாங்கும் போது எவ்வாறு இருந்ததோ அந்த நிலைக்கு மாற்றிக்கொள்ள முடியும்.


எனினும் மொபைல் சாதனங்களை Hard Reset செய்யும் முறையானது மொபைல் சாதனத்தை தயாரிக்கும் நிறுவனத்திற்கு நிறுவனமும்  சாதனத்துக்கு சாதனமும் வேறுபடுகின்றது. எனவே உங்கள் மொபைல் சாதனத்தை எவ்வாறு Hard Reset செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு கேள்விக் குறியாகவே உள்ளதா?

How to Hard reset my mobile phone


கவலை வேண்டாம்..! நீங்கள் பயன்படுத்துவது எந்த ஒரு மொபைல் சாதனமாக இருப்பினும் சரி உங்கள் மொபைல் சாதனத்தை எவ்வாறு Hard Reset செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறையை உங்களுக்கு கற்றுத்தருகின்றது Hardreset எனும் இணையதளம்.

6500 இற்கும் மேற்பட்ட மொபைல் சாதனங்களுக்கான Hard Reset செய்யும் வழிமுறைய அறிந்து கொள்ள உதவும் இந்த தளமானது அவற்றினை எந்த ஒரு தரப்பினராலும் மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் படத்துடன் கூடிய விளக்கத்தை தருவதுடன் அவற்றுக்கான வீடியோ விளக்கத்தையும் கொண்டுள்ளது.

இந்த தளத்துக்குச் சென்று இந்த தளத்தில் தரப்பட்டுள்ள Search Box இல் உங்கள் மொபைல் சாதனத்தின் பெயரை தட்டச்சு செய்து தேடுவதன் மூலமோ அல்லது A-Z தரப்பட்டுள்ள பட்டியலின் மூலமோ உங்கள் மொபைல் சாதனத்தை தெரிவு செய்த பின் அதனை Reset செய்வதற்கான வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.

Samsung, Sony, Nokia, HTC, LG, Blackberry, Huawei, Motorola, Vodafone, Lenovo, Oppo, Panasonic, Philips, Xolo, Xiaomi  என இன்னும் ஏராளமான நிறுவனங்களின் மொபைல் சாதனங்கள் இந்த தளத்தில் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.


மொபைல் Hard rest செய்தல்


இவற்றிற்கு மேலாக உங்கள் மொபைல் சாதனம் தொடர்பான பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வதற்கான குறியீடுகளும் (Codes) இந்த தளத்தில் தரப்பட்டுள்ளமையானது இன்னும் இனிப்பான விடயம் அல்லவா?

கருத்துகள் இல்லை:

MAM.Thanis Shihab. Blogger இயக்குவது.