Header Ads

startMiner - free and simple next generation Bitcoin mining software

விண்டோஸ் 10க்கு பலத்த வரவேற்பு- வெளியான ஒரே நாளில் 1.5 கோடி பேர் டவுன்லோட்.................

நியூயார்க்: மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 10 பதிப்புக்கு மக்களிடையே அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
அப்பதிப்பு வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்தனர்
மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 10 பதிப்பு வெளியான இருபத்திநான்கு மணி நேரத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் தமது கம்ப்யூட்டர்களை இலவசமாக தரம் உயர்த்திக் கொண்டுள்ளனர்.
கம்ப்யூட்டர் உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ் 10 பதிப்பு நேற்று முன்தினம் வெளியானது. பல்வேறு அதிவேக, நவீன அம்சங்களை கொண்ட இந்த பதிப்பை ஏற்கனவே விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ் 7, விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1 மாடல் கம்ப்யூட்டர்கள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் விண்டோஸ் 10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்திருந்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை அடுத்து விண்டோஸ் 10 பதிப்பை விண்டோஸ் 7, 8 மென்பொருட்களைக் கொண்ட கம்ப்யூட்டர்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் விண்டோஸ் 8.1 பதிப்பை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துபவர்கள் உட்பட வெளியான இருபத்துநான்கு மணி நேரத்துக்குள் சுமார் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்து உபயோகிக்கத் துவங்கியுள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
விண்டோஸ் 7 பதிப்புக்கு பிறகு வெளியான விண்டோஸ் 8 பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, விண்டோஸ் 9 வெளியாகவில்லை. சுமார் மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் வெளியான விண்டோஸ் 10 பதிப்பு பல்வேறு வகையான நவீன அம்சங்களுடன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

MAM.Thanis Shihab. Blogger இயக்குவது.