பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து மீண்டும் வெற்றி.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்டோக்ஸ்- போர்ஸ்டோவ் நிதான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.
4-வது ஒருநாள் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் நடந்தது. நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்த அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது.
தலைவர் அசார்அலி 80 ஓட்டமும், இமத்வாசிம் 57ஓட்டமும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி 50 ஒவரில் 8 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் திணறியது.
72 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது. ராய் (14 ஓட்டம்), ஹால்ஸ் (8), ஜோரூட் (30), மோர்கன் (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் பென் ஸ்டோக்ஸ்- போர்ஸ்டோவ் ஜோடி சரிவில் இருந்து மீண்டது. 5-வது விக்கெட்டுக்கு 103 ரன் எடுத்தது. ஸ்டோக்ஸ் 69 ஓட்டங்களிலும் , பேர்ஸ்டோவ் 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்கள். அதன்பின் மொய்ன்அலி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இங்கிலாந்து அணி 48 ஒவரில் 6 விக்கெட்டுக்கு 252 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 4-ம் திகதி நடக்கிறது.
கருத்துகள் இல்லை: